தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு

அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு

அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு


ADDED : அக் 24, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அலையில் சிக்கிய சிறுவனை கடலோர காவல் படை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரை சேர்ந்த தம்பதி புதுச்சேரிக்கு தனது 16 வயது மகனுடன் சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்த அவர்கள், அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு இன்று (அக்.,24) சென்றனர். கடலில் இறங்கி சிறுவன் குளித்து கொண்டிருந்தார்.

சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, அலையில் தத்தளித்தார். பதறிபோன சிறுவனின் பெற்றோரும், கடலில் குளித்து கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். கடற்கரையோரத்தில் நின்ற லைப் கார்டுகள் உடனே துரிதமாகச் செயல்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக கரையில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சிறுவன் அபாய கட்டத்தை தாண்டினார். அதன்பிறகு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us