/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் தங்க தேர் இழுத்து வழிபாடு
/
முதல்வர் பிறந்த நாள் தங்க தேர் இழுத்து வழிபாடு
ADDED : ஆக 06, 2025 09:06 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழாவையொட்டி, என்.ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெய ஸ்ரீதரன், நந்தா ஜெய பூவராகவன் சார்பில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
இதில் மாநில பொருளாளர் வேல்முருகன், மாநில வர்த்தகம், தொழில் முனைவோர் தலைவர் தினகரன், மாநில தொண்டரணி தலைவர் வீராசாமி, மாநில மகளிர் அணி துணைத் தலைவி திலகவதி, வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் முருகன், பொது செயலாளர் சிவராஜ், மாநில தொண்டரணி பொது செயலாளர் கோவிந்தராஜூ, மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ராஜேஸ்வரி, என்.ஆர்.காங்., நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.