/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சலவை கடையில் தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
/
சலவை கடையில் தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
சலவை கடையில் தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
சலவை கடையில் தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : ஜன 20, 2025 06:22 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே சலவை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரச்சந்திரன், 48. இவர், அபிேஷகப் பாக்கம் சாலையில் சலவை கடை நடத்தி வருகிறார். பணியை முடித்து, கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென கடை தீ பிடித்து எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
இதில், கடையில் இருந்த சலவை இயந்திரம், டேபிள்கள், வாடிக்கையாளர்களின் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சாம்பலாயின.
அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் ஆகும். தீ விபத்து குறித்து, தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.