உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்
ADDED : நவ 10, 2025 04:15 PM

லக்னோ; உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.
கோரக்பூரில் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (நவ.10) நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது;
பாரத மாதா மீதும், தாய்நாட்டின் மீதும் மக்களிடையே மரியாதை, ஒற்றுமை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
வந்தே மாதரத்தை பாடுவது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் மாணவர்கள் இடையே தேசப்பக்தியை வலுப்படுத்துவாகவும் இருக்கும்.
இந்த பாடலின் மீது மரியாதை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவின் மீது மரியாதை உணர்வை பிரதிபலிக்கும் வகையில், இங்குள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை கட்டாயமாக்குவோம்.
இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

