/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோபாலன்கடை குப்பை கிடங்கை மேட்டுப்பாளையத்திற்கு மாற்ற வேண்டும்; கவர்னரிடம் அமைச்சர் சாய் சரவணன் குமார் வலியுறுத்தல்

ADDED : டிச 22, 2024 07:48 AM
புதுச்சேரி: கோபாலன்கடை குப்பை கிடங்கு மேட்டுப்பாளையத்திற்கு மாற்ற அமைச்சர் சாய் சரவணன்குமார் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார்.
ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்த பின்பு அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறியதாவது;
கிருமாம்பாக்கம் அறுபடைவீடு மருத்துவ கல்லுாரிக்கு எதிரில் உள்ள இடத்தை கடந்த 2010ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கையகப்படுத்தி வழங்க ரூ.2 கோடி வருவாய்த்துறையில் செலுத்தப்பட்டது. இதுவரை அந்த இடம் கையகப் படுத்தவில்லை.
ஒரு தரப்பு நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர் மூலம் மேல்முறையீடு செய்து இடத்தை கையகப்படுத்த கூறியுள்ளோம்.
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எதற்காக கவர்னர் மாளிகை வந்துள்ளனர் என, எனக்கு தெரியாது. நான் என் துறை சார்ந்த விஷயம் குறித்து கவர்னரை சந்தித்து பேசினேன்.
பல ஆண்டுகளாக கோபாலன் கடை பகுதியில் இயங்கி வரும் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்பாததால், அருகில் உள்ள ஊசுட்டேரி தண்ணீர் அசுத்தமாகி வருகிறது. குப்பை கிடங்கை சுற்றி பால் பண்ணை, பொறையூர்பேட், குருமாம்பேட் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
அதனால் கோபாலன் கடை குப்பை கிடங்கை மேட்டுப்பாளையம் போக்குவரத்து முணையத்திற்கும், அங்குள்ள போக்குவரத்து முணையத்தை கோபாலன் கடைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளேன்' என்றனர்.