/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்
ADDED : நவ 06, 2025 05:35 AM

புதுச்சேரி: அரசு கல்லுாரி பேராசிரியர்கள் பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் துணைப் பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து பேராசிரியர்கள் பல போராட்டம் நடத்தியும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனையொட்டி, பேராசிரியர்கள் பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று தாகூர் கல்லுாரி மற்றும் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய வளாகத்தில் துவங்கினர்.
பேராசிரியர்கள் மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காமல் வகுப்புகளை நடத்திவிட்டு, மற்ற நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், சங்கரய்யா ஆகியோர் கூறுகையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

