/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுமை பெண்கள்' இ- பைக் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
/
'புதுமை பெண்கள்' இ- பைக் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
'புதுமை பெண்கள்' இ- பைக் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
'புதுமை பெண்கள்' இ- பைக் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
ADDED : டிச 03, 2025 05:58 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு 'புதுமை பெண்கள்' பெயரில் இ- பைக் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு 'புதுமை பெண்கள்' பெயரில் இ-பைக் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ரூ. 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை, தன்னாட்சி அமைப்புகள், வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது.
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம், இளங்கலை, முதுகலை பட்ட படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு தலைமை வகிக்கும் பெண்கள், விதவைகள், முதிர் கன்னிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இ-பைக் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இத்திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது.

