/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி அரசாணை வெளியீடு
/
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி அரசாணை வெளியீடு
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி அரசாணை வெளியீடு
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி அரசாணை வெளியீடு
ADDED : ஏப் 02, 2025 05:12 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடலில் மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விசை படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைக் காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 6 ஆயிரத்து 500ம், மழைக்கால நிவாரணமாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென மீன வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 8 ஆயிரம், மழைக்கால நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உயர்த்தப்பட்ட நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

