தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு ஊழியர்கள் சம்மேளன இணைப்பு சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சம்மேளன இணைப்பு சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சம்மேளன இணைப்பு சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 14, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டியக்கம், கவிஞர் தமிழொளி கல்வி வட்டம், சென்டாக் மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் முருகவேல், செயலாளர் சுமித்ரா மற்றும் தமிழொளி கல்வி வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் துரை, பொறுப்பாளர் ஜானி, சென்டாக் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அருள்முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில், பழைய முறைப்படியே வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரியில் மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புக்கான காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயித்து கோப்புகள் கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us