/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வியியல் கல்லுாரியை மேம்படுத்த அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
/
கல்வியியல் கல்லுாரியை மேம்படுத்த அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
கல்வியியல் கல்லுாரியை மேம்படுத்த அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
கல்வியியல் கல்லுாரியை மேம்படுத்த அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2024 03:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி கல்வியியல் கல்லுாரியை, உயர்கல்வித்துறையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு, ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கல்வியியல் கல்லுாரி தற்போது மூடுவிழாவை நோக்கி செல்கிறது.
அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கல்லுாரிக்கான அடிப்படை வசதிகள் கூட்டுறவு ஒன்றிய கட்டடத்தில் இல்லாததால், அண்ணா திடல் எதிரே உள்ள அரசு பள்ளிக்கு கல்வியியல் கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், கல்வியியல் கல்லுாரி, உயர்கல்வி துறையுடன் இணைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
ஆனால், அதற்கான பணிகள் இதுவரை மேற்கொள்ளபடவில்லை. மேலும், 6 விரிவுரையாளர்கள் உள்ள இடத்தில், தற்போது 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என, தெரிகிறது.
எனவே, கல்வியியல் கல்லுாரியை சட்டசபையில் அறிவித்தபடி உயர்கல்வி துறையோடு இணைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

