/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தாதை கண்டித்து போராட தயாராகி வரும் அரசு ஊழியர்கள்
/
ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தாதை கண்டித்து போராட தயாராகி வரும் அரசு ஊழியர்கள்
ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தாதை கண்டித்து போராட தயாராகி வரும் அரசு ஊழியர்கள்
ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தாதை கண்டித்து போராட தயாராகி வரும் அரசு ஊழியர்கள்
ADDED : பிப் 04, 2025 05:47 AM
புதுச்சேரி: ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த பொதுத் துறை, அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் ரெடியாகி வருகின்றன.
புதுச்சேரி அரசு உள்ளாட்சி, உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளது.
அதே வேளையில் பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுப்பட்ட பொதுத் துறை சார்பு நிறுவனங்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இருப்பினும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்த பொதுத் துறை, அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் ரெடியாகி வருகின்றன.
இது குறித்து ஏழாவது ஊதிய குழு அமலாக்கத்திற்கான அரசு சார்பு நிறுவன மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஏழாவது ஊதிய குழு அமல்படுத்தாத பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள் பொதுமக்களின் நலன் கருதி சேவை துறைகளாக இயங்கி வருகின்றன. ஆனால் வருவாயை அளவுகோலாக கொண்டு உரிமைகளை மறுப்பது ஏற்புடையது அல்ல. எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகள் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம். வரும் 7 ம்தேதி முதற்கட்ட போராட்டத்தை துவக்க உள்ளோம் என்றார்.

