/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பொறியாளர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அரசு பொறியாளர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு பொறியாளர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு பொறியாளர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஆக 02, 2025 06:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி பொறியியல் கல்லுாரியில் 1996ல் சேர்ந்து 2000ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாக் குழுவின் செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மோகன் பல்கலை வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார். கல்வி இயக்குனர் விவேகானந்தன், முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவர் சாந்தி பாஸ்கரன், பதிவாளர் (பொ) சுந்தரமூர்த்தி மற்றும் மின்னியல் துறை தலைவர் இளஞ்சேரலாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக கல்லுாரியின் முன்னாள் முதல்வர்கள் எத்திராஜூலு, பிரிதிவிராஜ், கோதண்டராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்குபெற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீராம், சத்தியன், சதீஷ் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். பேராசிரியை ரேவதி நன்றி கூறினார்.