ADDED : ஏப் 22, 2026 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 26ம் தேதி நடத்தவிருந்த ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
இது குறித்து தேர்வாணைய உறுப்பினர் செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 26ம் தேதி நடத்தவிருந்த ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

