UPDATED : அக் 12, 2026 06:16 PM
ADDED : அக் 12, 2026 05:59 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சுப்பையா நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி விடுதலை போராட்ட தியாகி சுப்பையா நினைவு தினத்தையொட்டி, நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நேற்று மாரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜவேலு, சிவகொழுந்து எம்.எல்.ஏ.,க்கள் நேரு, மோகன்தாஸ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூ., சார்பில் மாநில தலைவர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் உட்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
