/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதவை மகள் திருமண நிதி உதவி ரூ.40 ஆயிரமாக உயர்த்தி அரசாணை
/
விதவை மகள் திருமண நிதி உதவி ரூ.40 ஆயிரமாக உயர்த்தி அரசாணை
விதவை மகள் திருமண நிதி உதவி ரூ.40 ஆயிரமாக உயர்த்தி அரசாணை
விதவை மகள் திருமண நிதி உதவி ரூ.40 ஆயிரமாக உயர்த்தி அரசாணை
ADDED : ஜன 23, 2026 05:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விதவை மகள் திருமண நிதி உதவி ரூ.40 ஆயிரமாகவும் விதவை, முதிர்கன்னிகள் உதவித் தொகை ரூ.500 உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, மாத உதவித்தொகை ரூ.500, விதவை மகள் திருமண உதவித்தொகை 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அதன்படி விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருமண உதவித்தொகை ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை ஒப்புதலுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பு செயலர் முத்துமீனா வெளியிட்டார்.
இதேபோல் முதியோர் உதவித்தொகை உயர்வுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 55 வயது முதல் 60 வயது வரை மாதத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய், 60 முதல் 79 வயது வரை 3 ஆயிரம் ரூபாய், 80 வயதுக்கு மேல் 4 ஆயிரம் ரூபாய் என, உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆணை நிதித்துறை ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தமாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது.

