/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பு கட்டை இடையே வழி கேட்டு மறியல் முயற்சியால் பரபரப்பு
/
தடுப்பு கட்டை இடையே வழி கேட்டு மறியல் முயற்சியால் பரபரப்பு
தடுப்பு கட்டை இடையே வழி கேட்டு மறியல் முயற்சியால் பரபரப்பு
தடுப்பு கட்டை இடையே வழி கேட்டு மறியல் முயற்சியால் பரபரப்பு
ADDED : ஜன 23, 2026 05:09 AM
அரியாங்குப்பம்: தடுப்பு கட்டை இடையில் ஊருக்கு செல்ல வழி கேட்டு, கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
அரியாங்குப்பத்தில் இருந்து நோணாங்குப்பம் வரை சாலையில் தடுப்பு கட்டை ஒரு அடி உயரத்தில் இருந்தது. அதனால், அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டன. அதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம், அந்த பகுதியில், 4 அடி உயரத்தில்கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து நோணாங்குப்பம் ஊருக்குள் செல்ல படகு குழாம் எதிரே உள்ள சாலை வழியாக சுற்றி செல்வதால் விபத்து ஏற்படுகிறது. அதனால், பெட்ரோல் பங்க் எதிரே வழி ஏற்படுத்த வேண்டும் என, நோணாங்குப்பம் பகுதியில் குடியிருக்கும் மக்கள், நேற்று காலை 10:30 மணியளவில், சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறியதையடுத்து, மக்கள் அங்கிருந்து சென்றனர்.

