100 சதவீத முத்திரை வரியை திருப்பி செலுத்த அரசு... மும்முரம்: தொழிற்சாலைகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
100 சதவீத முத்திரை வரியை திருப்பி செலுத்த அரசு... மும்முரம்: தொழிற்சாலைகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
ADDED : செப் 07, 2025 11:13 PM

புதுச்சேரி: நீண்ட நாட்களுக்கான நிலுவையில் இருந்த தொழிற்சாலைகளுக்கான 100 சதவீத முத்திரை வரி மானியத்தை திருப்பி வழங்குவதற்கான பணிகளை அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. 2018ம் ஆண்டிற்கு பிறகு புதிதாக தொழில் துவங்கிய தொழிற்சாலைக்கு இந்த முத்திரை வரி திருப்ப கிடைக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், 12 வகையான மானிய திட்டங்களை தொழில் வணிகத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் தொழில் மூலதன மானியம் முக்கியமானது. புதிய மற்றும் விரிவாக்கம் செய்யும் குறு மற்றும் சிறு தொ ழில்களுக்கு இந்த மானியம் மூலம் மிகுந்த பயனடைகின்றன.
இதன் மூலம் குறு மற்றும் சிறு தொழில் மூலதன மானியம் 40 சதவீதமாக, நிலம், கட்டடம் மற்றும் இயந்திரங்களின் முதலீட்டில் செலவிடும் தொகையில் 40 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம். மத்திய மற்றும் பெருந்தொழில்களுக்கு 35 சதவீத மானியமாக, அதிகபட்சம் 35 லட்சம் ரூபாய் வரை பெறலாம். பெண்கள் மற்றும் எஸ்.சி.எஸ்.டி., தொழில் முனைவோருக்கு 45 சதவீத மானியமாகவும் அதிக பட்சம் 75 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
இதேபோல் வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. வங்கிகளில் மூலதன கடன் பெறும் தொழிற்சாலைகள் தாங்கள் கட்டும் வட்டியில் இருந்து 25 சதவீதம் மானியமாக பெறலாம். இது 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை பெறலாம். மாகி, மற்றும் ஏ னாம் பிராந்தியங்களில் 7 ஆண்டு வரை வட்டி மானியம் அளிக்கப்படுகின்றது.
ஆனால் 2017ம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சாலைகள் விண்ணப்பித்தும் மானியம் முறையாக வழங்கப்படவில்லை.
என்.ஆர் காங்., - பா.ஜ., பொறுப்பேற்ற பிறகு நிலுவையில் உள்ள தொழிற்சாலை மானியங்கள் படிப்படியாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதம் முத்திரை வரியை திருப்பி செலுத்தும் மானியம் கடந்த 2016ம் ஆண்டு முதல் தரப்படவில்லை. இத்தனைக்கும் அந்தாண்டு கொண்டுவரப்பட்ட புதிய தொழிற்கொள்கையில் இடம் பெற்றிருந்தும் வழங்கப்படவில்லை. இந்த முத்திரை வரியை தொழிற்சாலைக்கு திருப்பி தர புதுச்சேரி அரசு முடிவு செய்து தொழில் வணிகத் துறை வாயிலாக பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இது குறித்து தொழில் வணிக துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய தொழில் துவங்க நிலம், கட்டடம் வாங்குதல், குத்தகை, அடமானம் போன்றவைக்கான 100 சதவீத முத்திரை வரியை திரும்பி செலுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. எனவே கடந்த 04.06.2018ம் தேதிக்கு பிறகு யாரேனும் புதிய தொழில் துவங்க நிலம், கட்டடம் வாங்குதல், குத்தகை, அடமானமாக நிலத்தை பதியப்பட்டு இருப்பின் அத்தொகையை திருப்பி செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் இத்துறையில் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பத்தினை துறையின் வெப்சைட்டியில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
இல்லையெனில் துறையின் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதற்குரிய விபரங்களுடன் அடுத்த மாதம் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி நிராகரிக்கப்படும்' என்றனர்.
புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு, 100 சதவீத முத்திரை வரியை எதிர்பார்த்திருந்த தொழிற்சாலைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலதாமதம் ஏன்? கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தொழிற் கொள்கையில் புதிதாக தொழில் துவங்க நிலம் வாங்கினால், அவர்களுக்கு 100 சதவீத முத்திரை வரி திருப்ப தரப்படும் என, முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த முத்திரை வரியை யார் மூலம் திருப்பி தரலாம் என்பதில் ஒருமித்த கருத்து இல் லை.
ஒருவழியாக பஞ்சாயத்து தீர்த்து தொழில் துறையிடம் என்.ஓ.சி., வாங்கிக்கொண்டு, இந்த முத்திரை வரியை தொழிற்சாலைக்கு வருவாய் துறை வாயிலாக திருப்பி தர முடிவு செய்யப்பட்டது. மேலும், 2017ம் ஆண்டு முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்கு தொழிற்சாலைக்கு தரப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது.
2015ம் ஆண்டு பிறகு தொழில் துறையானது எதற்கும் என்.ஓ.சி., கொடுக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட, அதனை சுட்டிக்காட்டி தொழில் துறையும் வருவாய் துறைக்கு என்.ஓ.சி., கொடுக்காமல் விலகி கொண்டது.
அதனையடுத்து மீண்டும் கேபினெட்டில் வைத்து புதிய முடிவு எடுக்கப்பட்டது. நிலம் பதிவு செய்யும்போதே முத்திரை வரியில் இருந்து தொழிற்சாலைக்கு விலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு நிலம் பதிவு செய்த பிறகு அதற்கான முத்திரை வரியை திருப்பி தந்துவிடலாம் என, முடிவு செய்து 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
நிதி நெருக்கடி காரணமாக 100 சதவீத முத்திரை வரி திருப் பி தரப்படவில்லை. இப்போது தான் முதல் முறையாக தொழிற்சாலைக்கு முத்திரை வரியை புதுச்சேரி அரசு திருப்பி தர உள்ளது.
காலதாமதம் ஏன்?
கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தொழிற் கொள்கையில் புதிதாக தொழில் துவங்க நிலம் வாங்கினால், அவர்களுக்கு 100 சதவீத முத்திரை வரி திருப்ப தரப்படும் என, முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த முத்திரை வரியை யார் மூலம் திருப்பி தரலாம் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.
ஒருவழியாக பஞ்சாயத்து தீர்த்து தொழில் துறையிடம் என்.ஓ.சி., வாங்கிக்கொண்டு, இந்த முத்திரை வரியை தொழிற்சாலைக்கு வருவாய் துறை வாயிலாக திருப்பி தர முடிவு செய்யப்பட்டது. மேலும், 2017ம் ஆண்டு முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்கு தொழிற்சாலைக்கு தரப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது. 2015ம் ஆண்டு பிறகு தொழில் துறையானது எதற்கும் என்.ஓ.சி., கொடுக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட, அதனை சுட்டிக்காட்டி தொழில் துறையும் வருவாய் துறைக்கு என்.ஓ.சி., கொடுக்காமல் விலகி கொண்டது.
அதனையடுத்து மீண்டும் கேபினெட்டில் வைத்து புதிய முடிவு எடுக்கப்பட்டது. நிலம் பதிவு செய்யும்போதே முத்திரை வரியில் இருந்து தொழிற்சாலைக்கு விலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு நிலம் பதிவு செய்த பிறகு அதற்கான முத்திரை வரியை திருப்பி தந்துவிடலாம் என, முடிவு செய்து 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
நிதி நெருக்கடி காரணமாக 100 சதவீத முத்திரை வரி திருப்பி தரப்படவில்லை. இப்போது தான் முதல் முறையாக தொழிற்சாலைக்கு முத்திரை வரியை புதுச்சேரி அரசு திருப்பி தர உள்ளது.