ADDED : மார் 23, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா, திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்தது.
தலைமை ஆசியர் தாஜூதீன் அலி அகமத் தலைமை தாங்கி, ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆசிரியர் சுருதி வரவேற்றார். ஆசிரியர் கனகதுர்கா தொகுத்து வழங்கினார்.
வில்லியனுார் வட்டம்- 5, பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். விழாவில், முதன்மை கல்வி அலுவலர் மோகன் கலந்து கொண்டு, வகுப்பு வாரியாக அதிக மதிப்பெண் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியர் மோகனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சீதாதேவி மற்றும் கவுரவ பாலசேவிகா ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.