/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணி
/
அரசு பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணி
ADDED : டிச 06, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை சார்பில், 46.30 லட்சம் ரூபாய் செலவில், நெட்டப்பாக்கம் தொகுதி, மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி கட்டடம் புனரமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி துணை முதல்வர் செம்பியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

