/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : டிச 06, 2025 05:30 AM

திருக்கனுார்: திருக்கனுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருக்கனுார், போன் நேரு மேல்நிலைப் பள்ளி யில் 'தினமலர் - பட்டம்' இதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
போட்டியில், பிளஸ் 1 மாணவர்கள் சந்திரமோகன், சேஷாத்ரி முதலிடத்தையும், பிளஸ் 1 மாணவிகள் வினிஷா, இலக்கியா 2ம் இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளியின் முதல்வர் துரை ஜானகிராமன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

