தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளி பொருட்கள் சேதம் இருவர் கைது: சிறுவனுக்கு வலை

அரசு பள்ளி பொருட்கள் சேதம் இருவர் கைது: சிறுவனுக்கு வலை

அரசு பள்ளி பொருட்கள் சேதம் இருவர் கைது: சிறுவனுக்கு வலை


UPDATED : அக் 18, 2026 12:00 AM

ADDED : அக் 17, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:00 AM ADDED : அக் 17, 2026 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே குடோனில் இருந்த மொபட்டினை திருடி, அரசு பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிரபாகரன், 35; இவர், அதே கிராமத்தில் மளிகைப் பொருட்கள் குடோன் வைத்துள் ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குடோனில் இருந்து சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, குடோன் மேற்கூரையை உடைக்க முயற்சித்த 3 பேர் அங்கிருந்த டி.வி.எஸ்., மொபட்டினை திருடி தப்பி சென்றனர்.

மேலும், அவர்கள் பைத்தந்துறை அரசு தொடக்கபள்ளியில் இருந்த கேமரா, புரொஜெக்டர் உட்பட பல்வேறு பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, பைத்தந்துறை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், பைத்தந்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீதரன், 20; பொற்படாக்குறிச்சி மாயகண்ணன் மகன் குருநாதன், 24; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூவர் மீதும் வழக்குப் பதிந்து, ஸ்ரீதரன், குருநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us