/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
ADDED : ஜன 09, 2026 08:05 AM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் இந்திரா அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், புதுச்சேரியில், கலை மற்றும் பண்பாட்டு இடங்களை பார்வையிட்டனர்.
புதுச்சேரியில் உள்ள கலை மற்றும் பண்பாட்டுக்கு உரிய இடங்களை பார்வையிட பள்ளி சார்பில், கல்வி சுற்றுலா செல்ல மாணவர்களை அழைத்து சென்றனர். அவர்கள், இரும்பை சிவன் கோவில், லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் கோலரங்கம், பகுதிக்கு சென்றனர். அங்கு, சந்திராயன்-3 ஏவுகணை குறித்து படக்காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, அருங்காட்சியகத்திற்கு சென்று, கல்வெட்டுகள், சிலைகள், நாணயங்கள், அரிக்கன்மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அவற்றின் வரலாறுகளை அறிந்த கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் ஹரி கோவிந்தன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

