தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா


ADDED : பிப் 19, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் கல்விசார் சுற்றுலா மேற்கொண்டனர்.

முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்திற்கு சென்ற மாணவர்கள் கலைஞர்கள் உருவாக்கிய மண் பானைகள், கண்ணாடி ஓவியங்கள், தோல் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களை பார்வையிட்டனர். மேலும், கலைஞர்கள் பணிபுரியும் முறையை நேரில் கண்ட மாணவர்கள், கைவினைப் பணியின் நுட்பங்களையும், பொறுமையின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டனர்.

முன்னதாக, கல்வி சுற்றுலாவை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜமாலுதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் பிரேமலதா, தீபா, புஷ்பவள்ளி, ஜெய்சுதா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us