/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி
ADDED : ஆக 23, 2025 04:12 AM

புதுச்சேரி : சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் பரிசு பெற்ற அர்ச்சுன சுப்புராய நாயக்கர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதலியார்பேட்டையில் அர்ச்சுன சுப்புராய நாயக்கர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பிடித்து, பரிசு பெற்றது.
இதற்கிடையே, இந்த மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிக்கான பயிற்சி மேற்கொள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
சுதந்திர தின விழாவில், பரிசு பெற்றதை தொடர்ந்து, பயிற்சி பெற இடம் ஏற்பாடு செய்து கொடுத்தற்காக தலைமை ஆசிரியர் கோமதி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டினார்.