தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

 மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி


ADDED : பிப் 04, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேளாண் துறை சார்பில் நடந்த மலர் கண்காட்சி அலங்கார போட்டியில், அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் 3 நாள் மலர் காய் மற்றும் கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடந்தது.

இதில், மலர் கண்காட்சி அலங்கார போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.

அதன்படி, தனிநபர் பிரவில் ஜப்பானிய அலங்காரத்தில் மாணவி லோகேஸ்வரி, நிகழ்கால மலர் அலங்கார பிரிவில் மாணவி ரதினி, சாதனா, மேற்கத்திய அலங்கார பிரிவில் தீபிகா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து பரிசுகளை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளையும், வழிகாட்டி நல்லாசிரியர் தெய்வகுமாரி ஆகியோரை பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us