ADDED : ஆக 20, 2026 11:04 PM
வில்லியனுார்: வில்லியனுாரில் மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த கோபாலன்கடை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ்,42; இவர் வில்லியனுார் கண்ணகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். மேலும் இவர், வில்லியனுார் வீர ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் தனியார் வீட்டை வாடகை எடுத்து டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்த டியூஷன் சென்டரில் அதே பள்ளி மாணவி, ஒருவர் டியூசன் சேர்ந்து படித்துவந்தார். டியூஷனில் மற்ற மாணவர்களை அனுப்பிவிட்டு, இந்த மாணவிக்கு மட்டும் பெஷல் கிளாஸ் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவிக்கு திடீர் என்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவி கர்ப்பமாகி இருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெற்றோர், வீட்டிற்கு அழைத்து சென்று மாணவியிடம் விசாரணை செய்தனர். அப்போது ஆசிரியர் டியூஷன் சென்டரில் அத்துமீறி நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர், வில்லியனுார் போலீசில் ஆசிரியர் மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் ஆசிரியர் மீது போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்துள்ள, இந்த சம்பவம் வில்லியனுாரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
