/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் அரசு செயலர் ஆய்வு
/
உழவர்கரை தொகுதியில் அரசு செயலர் ஆய்வு
ADDED : ஏப் 25, 2025 04:43 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் எம்.எல்.ஏ., முன்னிலையில் அரசு செயலர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
உழவர்கரை தொகுதி மக்கள் தெரிவித்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, சிவசங்கர் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு செயலர் முத்தம்மா, உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஜ்ராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், சிவசங்கர் எம்.எல்.ஏ.,வுடன் பிச்சைவீரன்பேட்டை பகுதியை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், விடுபட்ட 52 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து மூலகுளம், தக்ககுட்டை பகுதிகளில் உள்ள இரு குளங்கள் மற்றும் மூலக்குளம் வாய்க்கால்களை துார்வாரி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மூலக்குளத்தில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

