/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத் தேர்வில் சாதித்த அரசு மாணவிகளுக்கு பாராட்டு
/
பொதுத் தேர்வில் சாதித்த அரசு மாணவிகளுக்கு பாராட்டு
பொதுத் தேர்வில் சாதித்த அரசு மாணவிகளுக்கு பாராட்டு
பொதுத் தேர்வில் சாதித்த அரசு மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : மே 22, 2025 11:22 PM

புதுச்சேரி:முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அனைவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி ரிஹானா 500க்கு 475 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். மாநிலத்தில் முதல் முறையாக இப்பள்ளியில் கர்நாடக இசை கலை சார்ந்த பாடம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடத்தை ஆர்வத்துடன் படித்த மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவிகள் அனீசாபத்துல், பாஹிமா ஆகியோர் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். பொதுத்தேர்வில் சாதித்த மாணவிகள், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்களை பள்ளி முதல்வர் சாய் வர்கிஸ் பாராட்டினார்.