/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
/
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : அக் 13, 2025 06:29 AM

புதுச்சேரி; புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தின், 20வது பொதுப்பேரவைக் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி கீர்த்தி மகாலில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். உறுப்பினர் பொற்செழியன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 14 அரசு ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி உள்ள 33 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதி க மதிப்பெண்கள் மற்றும் பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு 5 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொ கை வழங்கினார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா, பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் சிவகாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை 3.5 சதவீதம் வழங்கவும், 2025-26ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், அனுமதிக்கப்பட்ட பங்கு மூல தனத்தின் உச்சவரம்பை உயர்த்துதல், சங்க இயக்குநர் குழு பதவிக்காலத்தை திருத்தம் செய்ய பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. உறுப்பினர் அரங்க செந்தில்குமார் நன்றி கூறினார்.