/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துறைமுகம் விரிவாக்கத்தால் 2 மடங்கு மீன்பிடி தொழில்; அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு
/
துறைமுகம் விரிவாக்கத்தால் 2 மடங்கு மீன்பிடி தொழில்; அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு
துறைமுகம் விரிவாக்கத்தால் 2 மடங்கு மீன்பிடி தொழில்; அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு
துறைமுகம் விரிவாக்கத்தால் 2 மடங்கு மீன்பிடி தொழில்; அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு
ADDED : அக் 13, 2025 06:28 AM
புதுச்சேரி; காரைக்காலில் நடந்த மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசிய தாவது:
காரைக்காலில் மீனவ மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பிற்கும் ஒரே நேரத்தில் 130 கோடி ரூபாய்க்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 2012ல் முதல்வர் ரங்கசாமி காரைக்கால் துறைமுகத்தில் புனரமைப்பு பணிகளை செய்தார். தற்போது, விரிவாக்கத்தின் மூலம் மீனவர்கள் இரண்டு மடங்கு மீன்பிடி தொழிலை செய்ய முடியும்.
கடந்த காங்., ஆட்சி பட்ெஜட்டில் மீனவர்களுக்கு 77 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில் 132 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆட்சியில் டீசல் மானியம் 6 ரூபாய் கிடைத்தது. தற்போது லிட்டருக்கு 12 ரூபாய் என ஒரு ஆண்டிற்கு 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு அதிர்ஷ்டம், பிரதமர் மோடியின் ஆட்சி இன்னும் 2029 வரை இருக்கிறது. இந்த ஆட்சியில் நமக்கு தேவையான நிதி அதிகமாக கிடைக்கும். இன்று கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி எடுத்து வைத்த பல அற்புதமான திட்டங்கள், ஆசிய வங்கி மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உதவி கிட்டதட்ட 4,700 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டிற்கு கடன் உதவியாக கிடைத்து இருக்கிறது.
நீர் நிலைகளை பெருக்குவதற்காக 450 கோடி ரூபாய் ஜல்சக்தி மூலம் கிடைத்து இருக்கிறது. இரண்டு நாட்களில் 600 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்படுகிறது. கவர்னரும், முதல்வரும் சேர்ந்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி கொண்டு இருக்கின்றனர்' என்றார்.