/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் திட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல்
/
கடன் திட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல்
ADDED : பிப் 23, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அட்டவணை மற்றும் பழங்குடியின மக்களுக்கான பிற கடன் திட்டங்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அட்டவணை மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மாநில அரசின் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக கல்வி கடன் வழங்கப்படுகிறது.
கல்விக் கடன் மற்றும் தகுதியுடைய இதர அட்ட வணை மற்றும் பழங்குடியின மக்களுக்கான பிற கடன் திட்டங்களுக்கு விதிமுறைகளை ஏற்படுத்துவதற்கான கோப்பிற்கு, கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.