/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கலுக்கு ரூ.750 வழங்க கவர்னர் ஒப்புதல் இன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும்
/
பொங்கலுக்கு ரூ.750 வழங்க கவர்னர் ஒப்புதல் இன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும்
பொங்கலுக்கு ரூ.750 வழங்க கவர்னர் ஒப்புதல் இன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும்
பொங்கலுக்கு ரூ.750 வழங்க கவர்னர் ஒப்புதல் இன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும்
ADDED : ஜன 11, 2025 07:03 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதில் 750 ரூபாய் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தார். இந்த பொங்கல் பரிசு தொகை இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்தது, அதே வேகத்தில் டோக்கன் வழங்கும் பணி நடந்தது.
ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கவில்லை. பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்தது.
கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ரேஷன்கார்டுக்கு 750 ரூபாய் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
அதை தொடர்ந்து பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான பணிகளை குடிமை பொருள் வழங்கல் துறை ஈடுபட்டது.
கவர்னர், நிதி துறையின் ஒப்புதலுக்கான கோப்பு அனுப்பியது. இந்த கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்தார்.
அதை தொடர்ந்து அவரவரர் வங்கி கணக்கில் இன்று 11ம் தேதி செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம் 3.44 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கு பதில் 750 ரூபாய் அவரவரர் வங்கி கணக்கில் இன்று 11ம் தேதி செலுத்தப்படும்.
இதன் மூலம் அரசுக்கு 25 கோடி ரூபாய் செலவாகும்' என்றனர்.

