/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இஸ்ரோ மாஜி தலைவர் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
/
இஸ்ரோ மாஜி தலைவர் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : ஏப் 26, 2025 04:21 AM
புதுச்சேரி : இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் மறைவிற்கு கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள இரங்கலில், 'இந்திய விண்வெளி அமைப்பை உலக அரங்கில் உயரச் செய்தவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் மறைவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விஞ்ஞானிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.