/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இல கணேசன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
/
இல கணேசன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : ஆக 16, 2025 03:09 AM
புதுச்சேரி: நாகாலாந்து கவர்னர் இல கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள இரங்க ல் செய்தி; நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர். பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டவர். அவரை பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி இரங்கல் செய்தியில், கவர்னர் இல கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. தனது வாழ்வின் பெரும் பகுதியை தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெ ரிவித்துக்கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது மறைவுக்கு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

