/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டர் செரியன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
/
டாக்டர் செரியன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : ஜன 28, 2025 06:18 AM
புதுச்சேரி: டாக்டர் செரியன் மறைவிற்கு கவர்னர், முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் இரங்கல் செய்தியில், உலகப் புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பத்மஸ்ரீ விருதாளர் டாக்டர் செரியன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை எப்போதும் நம்பிக்கையோடு அணுகும் அவர் பலருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வர் ரங்கசாமி இரங்கல் செய்தியில்
புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும், எனது நண்பருமான மருத்துவர் செரியன் மறைவு எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளை பெற்றவர். அவர், மூளைச் சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தேவைப்படும் நபருக்கு வெற்றிகரமாகப் பொருத்தி சாதித்துக் காட்டியவர்.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

