/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் - முதல்வர் மோதலா ? நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி
/
கவர்னர் - முதல்வர் மோதலா ? நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி
கவர்னர் - முதல்வர் மோதலா ? நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி
கவர்னர் - முதல்வர் மோதலா ? நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி
ADDED : மே 18, 2025 02:38 AM
புதுச்சேரி: முதல்வர், கவர்னர் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறிய, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசின் ஆதரவோடு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த 80 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பிரதமர் கூறிய பெஸ்ட் புதுச்சேரி 90 சதவீத பணிகள் நிறைவேறி இருக்கிறது.
மக்கள் மத்தியில் புதுச்சேரி அரசுக்கு நல்ல பெயர் ஏற்பட்டு வருகிறது. அந்த வயிற்று எரிச்சலில், அரசியல் உள்நோக்கத்தோடு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதல்வர்- கவர்னர் இடையே கருத்து மோதல் இருப்பதாக, கூறியிருக்கிறார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்குமானால், இலவச அரிசி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீடு எப்படி செய்ய முடியும். இன்ஜினியரிங், நர்சிங், கலைத்துறையில் உள்ள பட்ட படிப்புகளை படிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுகீடு கொடுப்பதற்கு, அரசு விரைவாக கோப்புகளை தயார் செய்து, கவர்னருக்கு அனுப்ப உள்ளது.
இந்த கோப்புகள் எப்போது வரும் என என்னிடம், கவர்னர் கேட்டார். மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு செல்ல, முதல்வரும், கவர்னரும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முன்னாள் முதல்வர் நாராயணசாமி முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.