UPDATED : நவ 07, 2026 07:38 PM
ADDED : நவ 07, 2026 07:36 PM
புதுச்சேரி: கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தியில், ஒளி மயமான தீபாவளி பண்டிகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் - சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்.
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக, 'சுய சார்பு இந்தியா' கொள்கையைப் பின்பற்றி, இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்யும் பரிசு பொருட்களை வாங்கி, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், தீமையை வென்று நன்மை நிலைபெறுவதையும், இருளை அகற்றி ஒளி பரவுவதையும் உணர்த்தும் தீபாவளி திருநாள். மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை மற்றும் வளத்தைப் பெருகச் செய்யட்டும்.
இந்நாளில் நம்மிடையே உள்ள மகிழ்ச்சியை ஏழை, எளிய மக்களுடனும் பகிர்ந்து கொண்டு, ஆதரவற்றோர் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு இயன்ற உதவிகளை செய்து, மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் போற்றுவோம் என, கூறப்பட்டிருந்தது.
இதேபோல், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர், செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஆறுமுகம், அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், காங்., தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா உட்பட பலர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
