UPDATED : நவ 15, 2026 11:26 PM
ADDED : நவ 15, 2026 11:26 PM
புதுச்சேரி: கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைவர்கள் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன்: ஜனநாயகத்தின் நான்காவது துாணாக மதிக்கப்படும் பத்திரிகைத்துறை, மக்களின் குரலாக சமுதாயத்தின் மனசாட்சியாக திகழ்கிறது. சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் நேர்மையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், உங்களுடைய பணி பாராட்டுக்கு உரியது.
முதல்வர் ரங்கசாமி: அன்றாட நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, மக்களின் எதிர்பார்ப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக ஊடகங்கள் திகழ்கின்றன. உண்மை, நடுநிலைமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் ஊடகத் துறை, நல்லாட்சிக்கும், மக்களாட்சியின் வலிமைக்கும் அடித்தளமாக அமைகிறது.
இதேபோல், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன், எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
