/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
விநாயகர் சதுர்த்தி விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : ஆக 27, 2025 05:53 AM
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாநில மக்களுக்கு கவர்னர் மற்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி வாழ் சகோதர சகோதரிகளுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாக, பாரம்பரிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் இவ்விழா, மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், வேண்டுவோருக்கு வேண்டும் அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த திருநாள், அனைவரது வாழ்விலும் பொருள் வளம், மன வளம், உடல் நலம் என அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்.
உங்கள் அனைவரது உள்ளமும், இல்லமும் விநாயரின் பரிபூரண அருளாசிகளால் நிரம்பட்டும். வாழ்வு வளம் காணட்டும் என கூறியுள்ளார்.
இதேபோன்று சபாநாயகர் செல்வம், காங்., தலைவர் வைத்திலிங்கம், பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், மக்கள் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.