ADDED : ஆக 14, 2026 08:02 PM
புதுச்சேரி: சுதந்திர தின விழா இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து, கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற உயிர் தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுக்கு தியாகங்களை என்றென்றும் நினைத்து போற்றுவது நம்முடைய கடமை. தேசத்தின் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டை பேணிக் காத்திட இன்றை நாளில் நாம் உறுதி ஏற்போம் என, தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், எண்ணற்ற தியாகிகள் தங்களின் ரத்தம் சிந்தி பெற்று தந்த இந்த விடுதலை நாளில் நம் முன்னோருடைய அறப்போராட்டத்தையும், அவர்களது தியாகத்தையும், நினைவு கூர்ந்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், அஞ்சலியையும், செலுத்துவோம். இந்திய விடுதலையால் நாம் பெற்ற பலன்களை எண்ணிப் பெருமிதம் கொள்வதோடு அதன் பெருமையும், தொடர்ந்து காப்பதில் பெருமை கொள்வோம் என, தெரிவித்துள்ளார்.
இதே போல், சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவகொழுந்து, ராஜசேகரன், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள்., உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
