தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்


ADDED : ஆக 14, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் மற்றும் மங்கலம் தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் எம்.கே.எஸ்.பி., திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு காய்கறி விதை தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இரு தொகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதை தொகுப்பு பைகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள், வீடுகள் மற்றும் தோட்டங்களில் காய்கறிகளை பயிரிட்டு, குடும்பத் தேவையை பூர்த்தி செய்வதுடன், கூடுதல் வருமானம் கிடைக்கும்.

நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி கலைமதி, முன்னாள் சேர்மன் பாலமுருகன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us