/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
/
பாரதிதாசன் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
பாரதிதாசன் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
பாரதிதாசன் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
ADDED : ஏப் 30, 2025 12:22 AM

புதுச்சேரி : பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில், பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் உருவப்படத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.