/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாஜ்பாய் நினைவு நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
/
வாஜ்பாய் நினைவு நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
ADDED : ஆக 16, 2025 11:37 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 7 வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அதையொட்டி, கடற்கரை சாலை ,நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, பா.ஜ., சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் துாவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், செல்வம் எம்.எல்.ஏ., உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.