/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு
/
கண் பரிசோதனை முகாம் கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2025 05:08 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கணக்கு கருவூல இயக்குனரகத்தில் கண் பரிசோதனை முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு புதுச்சேரி கிளை தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில், ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் கணக்கு மற்றும் கருவூல இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.
இதில் கவர்னர் கைலாஷ் நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆனந்தன், முதுநிலை கணக்கு தணிக்கை அதிகாரி சுகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், கணக்கு மற்றும் கருவூல இயக்குநரக ஊழியர்கள் கலந்துகொண்டனர். முகாமில் அகர்வால் கண் மருத்துவமனை குழும டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

