/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.4 கோடிதங்கத்தேர் பணி கவர்னர் துவக்கி வைப்பு
/
ரூ.4 கோடிதங்கத்தேர் பணி கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : நவ 21, 2024 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரியில்சித்தி விநாயகர் சிவசுப்ரமணியர் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணியை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர் கோவிலில் தங்கத்தேர் செய்யும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த கவர்னர், தங்கத்தேர் செய்யும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த தங்கத்தேர், 12.5 அடி உயரத்தில், தேக்கு மரத்தில் செப்பத்தகடு பதித்து அதில், 600 சவரன் தங்க முலாம் பூசப்பட உள்ளது.
இதன் மதிப்பு ரூ.4 கோடி. நிகழ்ச்சியில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

