/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வரலாறு காணாத பாதிப்பு மத்திய குழுவிடம் கவர்னர் தகவல்

ADDED : டிச 09, 2024 06:20 AM

புதுச்சேரி: புயல் பாதிப்பினை ஆய்வு செய்த மத்திய குழுவினர் ராஜ்நிவாசில் கவர்னரை சந்தித்து கலந்துரையாடினர்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை பிரிவின் இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு நேற்று ஆய்வு செய்தது.
தொடர்ந்து ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர். சந்திப்பின்போது புதுச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு குறித்து மத்திய குழு விளக்கம் அளித்தனர். புயல் மழையின்போது மிகுந்த இன்னலுக்கு ஆளானதையும் பயிர்கள், குடியிருப்புகள், சாலை உள்கட்டமைப்புகள் மற்றும் உடைமைகள் மிகுந்த சேதம் அடைந்திருப்பதையும் மத்திய குழுவுக்கு கவர்னர் எடுத்துரைத்தார்.
மேலும், வரலாறு காணாத சேதத்தின் உண்மை நிலையை விரிவாக மத்திய அரசுக்கு எடுத்து கூறும் வகையில் அறிக்கையை அளிக்குமாறு மத்திய குழுவுக்கு அறிவுறுத்தினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், கலெக்டர் குலோத்துங்கன் உடனிருந்தனர்.