/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி முன்னேற்பாடு பணி: கவர்னர் ஆய்வு
மத்திய அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி முன்னேற்பாடு பணி: கவர்னர் ஆய்வு
மத்திய அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி முன்னேற்பாடு பணி: கவர்னர் ஆய்வு
UPDATED : ஆக 08, 2026 06:46 AM
ADDED : ஆக 07, 2026 08:41 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை யொட்டி, நடந்த முன்னேற்பாடு பணிகளை கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசு தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகை புரிகிறார். மத்திய அமைச்சர் வருகையை யொட்டி, கோரிமேடு காவலர் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள், ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங் உட்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
