/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டில் பங்குனி உத்திர விழா பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு
/
காலாப்பட்டில் பங்குனி உத்திர விழா பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு
காலாப்பட்டில் பங்குனி உத்திர விழா பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு
காலாப்பட்டில் பங்குனி உத்திர விழா பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு
ADDED : ஏப் 10, 2025 04:31 AM

புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் பங்கேற்க கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அழைப்பிதழ் வழங்கி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
பெரியகாலாப்பட்டில் பாலமுருகன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 53ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நாளை (11ம் தேதி) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கிறது.
நாளை மறுதினம் 12ம் தேதி இரவு தெப்ப உற்சவம், 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி, விழாவில் பங்கேற்குமாறு கவர்னர் கைலாஷ்நாதனுக்கு, காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமையில், ஆலய நிர்வாகிகள், பஞ்சாயத்தாரர்கள் அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்தனர்.