/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தாசில்தார் பணிக்கு நியமன ஆணை கவர்னர் வழங்கல்
/
துணை தாசில்தார் பணிக்கு நியமன ஆணை கவர்னர் வழங்கல்
ADDED : அக் 28, 2025 06:13 AM
புதுச்சேரி: துணை தாசில்தார் பணிக்கு பணி நியமன ஆணையை கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கினார்.
புதுச்சேரி வருவாய் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, போட்டி தேர்வு இருவேளைகளாக புதுச்சேரியில் 80 மையங்களிலும், காரைக்காலில் 12, மாகே- 3, ஏனாம்- 6 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு போட்டித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையினை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலாளர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

