பதக்கம் வென்ற வீரர்களுக்கு கவனர் கைலாஷ்நாதன் பாராட்டு
பதக்கம் வென்ற வீரர்களுக்கு கவனர் கைலாஷ்நாதன் பாராட்டு
ADDED : ஆக 16, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களை கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டினார்.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த முதலாவது உலக யோகாசன விளையாட்டு சான்பியன்ஷிப் போட்டியில் சீனியர் கேட்டகரி பிரிவில் ேஹண்ட் பேலன்ஸ் போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விராங்கனை செல்வரசி தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த 5வது தேசிய அளவிலான சப் ஜூனியர் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் புதுச்சேரி கிரணம்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இவர்கள் இருவரையும் விளையாட்டுத் துறை இயக்குனர் சுதாகர், கவர்னரிடம் அறிமுகம் செய்து வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டினார்.
